வெகுளாமை

திருக்குறள்:
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

மு.வ உரை:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே;
கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர்
போன்றவரே.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார்
உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை -
சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர்.
(மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் ,
கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர்
என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

Translation:
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.

ADVERTISEMENTS
Explanation:
Those, who
give way to excessive anger, are no better than dead men; but those, who
are freed from it, are equal to those who are freed (from death).

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை