கள்ளுண்ணாமை

 உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும் 
கட்காதல் கொண்டொழுகு வார்.


Who love the palm's intoxicating juice, each day,
No rev'rence they command, their glory fades away.

 உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான் 
எண்ணப் படவேண்டா தார்.
Drink not inebriating draught. Let him count well the cost.
Who drinks, by drinking, all good men's esteem is lost.

 ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச் 
சான்றோர் முகத்துக் களி.
The drunkard's joy is sorrow to his mother's eyes;
What must it be in presence of the truly wise?.

ADVERTISEMENTS
 நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும் 
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
Shame, goodly maid, will turn her back for aye on them
Who sin the drunkard's grievous sin, that all condemn.

 கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து 
மெய்யறி யாமை கொளல்.
With gift of goods who self-oblivion buys,
Is ignorant of all that man should prize.

 துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
Sleepers are as the dead, no otherwise they seem;
Who drink intoxicating draughts, they poison quaff, we deem.

ADVERTISEMENTS
 அழிவந்த உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் 
கள்ளொற்றிக் கண்சாய் பவர்.
Who turn aside to drink, and droop their heavy eye,
Shall be their townsmen's jest, when they the fault espy.

 களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து 
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

 களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் 
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.
Like him who, lamp in hand, would seek one sunk beneath the wave.
Is he who strives to sober drunken man with reasonings grave.

ADVERTISEMENTS
 கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால் 
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.
When one, in sober interval, a drunken man espies,
Does he not think, 'Such is my folly in my revelries'?.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை