பொருள்செயல்வகை

 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்லது இல்லை பொருள்.


Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.

 இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை 
எல்லாரும் செய்வர் சிறப்பு.
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.

 பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் 
எண்ணிய தேயத்துச் சென்று.
Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.

ADVERTISEMENTS
 அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள்.
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.

 அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் 
புல்லார் புரள விடல்.
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.

 உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் 
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.

ADVERTISEMENTS
 அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.
'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.

 குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று 
உண்டாகச் செய்வான் வினை.
As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.

 செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் 
எஃகதனிற் கூரிய தில்.
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.

ADVERTISEMENTS
 ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் 
ஏனை இரண்டும் ஒருங்கு.
Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை