கல்லாமை

 அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய 
நூலின்றிக் கோட்டி கொளல்.


Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

 கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும் 
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.

 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன் 
சொல்லா திருக்கப் பெறின்.
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!.

ADVERTISEMENTS
 கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
கொள்ளார் அறிவுடை யார்.
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.

 கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து 
சொல்லாடச் சோர்வு படும்.
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.

 உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் 
களரனையர் கல்லா தவர்.
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!.

ADVERTISEMENTS
 நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மாண் புனைபாவை யற்று.
Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.

 நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே 
கல்லார்கண் பட்ட திரு.
To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.

 மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் 
கற்றார் அனைத்திலர் பாடு.
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.

ADVERTISEMENTS
 விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் 
கற்றாரோடு ஏனை யவர்.
Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை