படைமாட்சி

 உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன் 
வெறுக்கையுள் எல்லாம் தலை.


A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.

 உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத் 
தொல்படைக் கல்லால் அரிது.
In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.

 ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை 
நாகம் உயிர்ப்பக் கெடும்.
Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!.

ADVERTISEMENTS
 அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த 
வன்க ணதுவே படை.
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.

 கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் 
ஆற்ற லதுவே படை.
That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.

 மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் 
எனநான்கே ஏமம் படைக்கு.
Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.

ADVERTISEMENTS
 தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த 
போர்தாங்கும் தன்மை அறிந்து.
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.

 அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை 
படைத்தகையால் பாடு பெறும்.
Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.

 சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் 
இல்லாயின் வெல்லும் படை.
Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.

ADVERTISEMENTS
 நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை 
தலைமக்கள் இல்வழி இல்.
Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை