அவையஞ்சாமை

 வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின் 
தொகையறிந்த தூய்மை யவர்.


Men, pure in heart, who know of words the varied force,
The mighty council's moods discern, nor fail in their discourse.

 கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன் 
கற்ற செலச்சொல்லு வார்.
Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.

 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 
அவையகத்து அஞ்சா தவர்.
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.

ADVERTISEMENTS
 கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற 
மிக்காருள் மிக்க கொளல்.
What you have learned, in penetrating words speak out before
The learn'd; but learn what men more learn'd can teach you more.

 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

 வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென் 
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.
To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?.

ADVERTISEMENTS
 பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து 
அஞ்சு மவன்கற்ற நூல்.
As shining sword before the foe which 'sexless being' bears,
Is science learned by him the council's face who fears.

 பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் 
நன்கு செலச்சொல்லா தார்.
Though many things they've learned, yet useless are they all,
To man who cannot well and strongly speak in council hall.

 கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் 
நல்லா ரவையஞ்சு வார்.
Who, though they've learned, before the council of the good men quake,
Than men unlearn'd a lower place must take.

ADVERTISEMENTS
உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.
Who what they've learned, in penetrating words know not to say, The council fearing, though they live, as dead are they.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை