தூது

 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் 
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு.


Benevolence high birth, the courtesy kings love:-
These qualities the envoy of a king approve.

 அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு 
இன்றி யமையாத மூன்று.
Love, knowledge, power of chosen words, three things,
Should he possess who speaks the words of kings.

 நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் 
வென்றி வினையுரைப்பான் பண்பு.
Mighty in lore amongst the learned must he be,
Midst jav'lin-bearing kings who speaks the words of victory.

ADVERTISEMENTS
 அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன் 
செறிவுடையான் செல்க வினைக்கு.
Sense, goodly grace, and knowledge exquisite.
Who hath these three for envoy's task is fit.

 தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி 
நன்றி பயப்பதாந் தூது.
In terms concise, avoiding wrathful speech, who utters pleasant word,
An envoy he who gains advantage for his lord.

 கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால் 
தக்கது அறிவதாம் தூது.
An envoy meet is he, well-learned, of fearless eye
Who speaks right home, prepared for each emergency.

ADVERTISEMENTS
 கடனறிந்து காலங் கருதி இடனறிந்து 
எண்ணி உரைப்பான் தலை.
He is the best who knows what's due, the time considered well,
The place selects, then ponders long ere he his errand tell.

 தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் 
வாய்மை வழியுரைப்பான் பண்பு.
Integrity, resources, soul determined, truthfulness.
Who rightly speaks his message must these marks possess.

 விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம் 
வாய்சேரா வன்கணவன்.
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.

ADVERTISEMENTS
 இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு 
உறுதி பயப்பதாம் தூது.
Death to the faithful one his embassy may bring;
To envoy gains assured advantage for his king.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை