பண்புடைமை

 எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு.


Who easy access give to every man, they say,
Of kindly courtesy will learn with ease the way.

 அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு.
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

 உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க 
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.
Men are not one because their members seem alike to outward view;
Similitude of kindred quality makes likeness true.

ADVERTISEMENTS
 நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் 
பண்புபா ராட்டும் உலகு.
Of men of fruitful life, who kindly benefits dispense,
The world unites to praise the 'noble excellence'.

 நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் 
பண்புள பாடறிவார் மாட்டு.
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.

 பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் 
மண்புக்கு மாய்வது மன்.
The world abides; for 'worthy' men its weight sustain.
Were it not so, 'twould fall to dust again.

ADVERTISEMENTS
 அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் 
மக்கட்பண்பு இல்லா தவர்.
Though sharp their wit as file, as blocks they must remain,
Whose souls are void of 'courtesy humane'.

 நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் 
பண்பாற்றார் ஆதல் கடை.
Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.

 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.

ADVERTISEMENTS
 பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் 
கலந்தீமை யால்திரிந் தற்று.
Like sweet milk soured because in filthy vessel poured,
Is ample wealth in churlish man's unopened coffers stored.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை