பண்புடைமை
திருக்குறள்:
நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு.
ADVERTISEMENTS
விளையாட்டாகக்கூட ஒருவரை இகழ்ந்து பேசுவதால் கேடு உண்டாகும். அறிவு முதிர்ந்தவர்கள், பகைவரிடமும் பண்புகெடாமல் நடந்து கொள்வார்கள்.
மு.வ உரை:
ஒருவனை
இகழ்ந்து பேசுதல் விளையாட்டிலும் துன்பம் தருவதாகும், பிறருடைய இயல்பை
அறிந்து நடப்பவரிடத்தில் பகைமையிலும் நல்லப் பண்புகள் உள்ளன.
சாலமன் பாப்பையா உரை:
விளையாட்டில்
விளையாட்டிற்காகக்கூட ஒருவனை இகழ்ந்து ஏளனமாகப் பேசுவது அவனுக்கு மன
வருத்தத்தைத் தரும்; அதனால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
என்று அறியும் திறம் உள்ளவர்கள், பகைவர்களிடம் கூட ஏளனமாகப் பேசார்.
ADVERTISEMENTS
Contempt is evil though in sport. They who man's nature know,
E'en in their wrath, a courteous mind will show.
ADVERTISEMENTS
Reproach
is painful to one even in sport; those (therefore) who know the nature
of others exhibit (pleasing) qualities even when they are hated.