பண்புடைமை

திருக்குறள்:
 நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் 
பகலும்பாற் பட்டன்று இருள்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நண்பர்களுடன் பழகி மகிழத் தெரியாதவர்களுக்கு உலகம் என்பது பகலில் கூட இருட்டாகத்தான் இருக்கும்.

மு.வ உரை:
பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல
பண்பு இல்லாததால் மற்றவர்களுடன் கலந்து பேசி மனம் மகிழும் இயல்பு
இல்லாதவர்க்கு, இந்தப் பெரிய உலகம் இருள் இல்லாத பகல் பொழுதிலும் கூட
இருளிலே இருப்பது போலவாம்.

ADVERTISEMENTS
Translation:
To him who knows not how to smile in kindly mirth,
Darkness in daytime broods o'er all the vast and mighty earth.

ADVERTISEMENTS
Explanation:
To those who cannot rejoice, the wide world is buried darkness even in (broad) day light.