துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் 
அதனின் அதனின் இலன்.



From whatever, aye, whatever, man gets free,
From what, aye, from that, no more of pain hath he!.

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின் 
ஈண்டுஇயற் பால பல.

'Renunciation' made- ev'n here true pleasures men acquire;
'Renounce' while time is yet, if to those pleasures you aspire.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் 
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.

'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.

ADVERTISEMENTS
இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை 
மயலாகும் மற்றும் பெயர்த்து.

'Privation absolute' is penance true;
'Possession' brings bewilderment anew.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் 
உற்றார்க்கு உடம்பும் மிகை.

To those who sev'rance seek from being's varied strife,
Flesh is burthen sore; what then other bonds of life?.

யான் எனது என்னும் செருக்கு 
அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் 
புகும்.

Who kills conceit that utters 'I' and 'mine',
Shall enter realms above the powers divine.

ADVERTISEMENTS
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் 
பற்றி விடாஅ தவர்க்கு.

Who cling to things that cling and eager clasp,
Griefs cling to them with unrelaxing grasp.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி 
வலைப்பட்டார் மற்றை யவர்.

Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று 
நிலையாமை காணப் படும்.

When that which clings falls off, severed is being's tie;
All else will then be seen as instability.

ADVERTISEMENTS
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 
பற்றுக பற்று விடற்கு.

Cling thou to that which He, to Whom nought clings, hath bid thee cling,
Cling to that bond, to get thee free from every clinging thing.