கூடாவொழுக்கம்

திருக்குறள்:
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் 
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித்தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.

மு.வ உரை:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன்
வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு
தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு
'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும்.
(இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று
என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம்.
காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே,
வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று.
இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத
வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே
ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு
உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான்
அறிக.).

மணக்குடவர் உரை:
வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல்,
பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ்
மேய்ந்த தன்மைத்து.

Translation:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.

ADVERTISEMENTS
Explanation:
The assumed
appearance of power, by a man who has no power (to restrain his senses
and perform austerity), is like a cow feeding on grass covered with a
tiger's skin.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை