குறிப்பறிவுறுத்தல்

திருக்குறள்:
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் 
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல்
தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை
விரும்பாத காதல்.

மு.வ உரை:
நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை:
நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
[அஃதாவது , தலைமகன் , தலைமகள் , தோழி என்ற இவர் ஒருவர்
குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் . இது பிரிந்து போய தலைமகன் வந்து
கூடியவழி நிகழ்வதாகலின் ,அவர் வயின் விதும்பலின்பின் வைக்கப்பட்டது.]

(பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத்
தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து,
அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்;
ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண்
உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு
காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக. (காத்தல் -
நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது
வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு
அறிவுறுத்தவாறு.).

மணக்குடவர் உரை:
நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக்
கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது:
இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக.

Translation:
Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,
Something, I know not, what, would utter of complaint.

ADVERTISEMENTS
Explanation:
Though you
would conceal (your feelings), your painted eyes would not, for,
transgressing (their bounds), they tell (me) something.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை