மானம்

திருக்குறள்:
 புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று 
இகழ்வார்பின் சென்று நிலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
இகழ்வதையும்
பொறுத்துக்கொண்டு, மானத்தை விட்டுவிட்டு ஒருவர் பின்னே பணிந்து செல்வதால்
என்ன புகழ் கிடைக்கும்? இல்லாத சொர்க்கமா கிடைக்கும்?.

மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின் பின் சென்று பணிந்து நிற்க்கும் நிலை, ஒருவனுக்கு புகழும் தராது, தேவருலகிலும் செலுத்தாது, வேறு பயன் என்ன.

சாலமன் பாப்பையா உரை:
உயிர்
வாழும் பொருட்டு மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்று
வாழும் வாழ்வு, இம்மைக்குப் புகழ் தராது. மறுமைக்கு விண்ணுலகிலும்
சேர்க்காது; வேறு என்னதான் தரும் அது?.

ADVERTISEMENTS
Translation:
It yields no praise, nor to the land of Gods throws wide the gate:
Why follow men who scorn, and at their bidding wait?.

ADVERTISEMENTS
Explanation:
Of
what good is it (for the high-born) to go and stand in vain before
those who revile him ? it only brings him loss of honour and exclusion
from heaven.