பொழுதுகண்டிரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் 
வேலைநீ வாழி பொழுது.Thou art not evening, but a spear that doth devour
The souls of brides; farewell, thou evening hour!.

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் 
வன்கண்ண தோநின் துணை.

Thine eye is sad; Hail, doubtful hour of eventide!
Of cruel eye, as is my spouse, is too thy bride?.

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் 
துன்பம் வளர வரும்.

With buds of chilly dew wan evening's shade enclose;
My anguish buds space and all my sorrow grows.

ADVERTISEMENTS
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து 
ஏதிலர் போல வரும்.

When absent is my love, the evening hour descends,
As when an alien host to field of battle wends.

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் 
மாலைக்குச் செய்த பகை.

O morn, how have I won thy grace? thou bring'st relief
O eve, why art thou foe! thou dost renew my grief.

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத 
காலை அறிந்த திலேன்.

The pangs that evening brings I never knew,
Till he, my wedded spouse, from me withdrew.

ADVERTISEMENTS
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி 
மாலை மலரும்இந் நோய்.

My grief at morn a bud, all day an opening flower,
Full-blown expands in evening hour.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் 
குழல்போலும் கொல்லும் படை.

The shepherd's pipe is like a murderous weapon, to my ear,
For it proclaims the hour of ev'ning's fiery anguish near.

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு 
மாலை படர்தரும் போழ்து.

If evening's shades, that darken all my soul, extend;
From this afflicted town will would of grief ascend.

ADVERTISEMENTS
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை 
மாயும்என் மாயா உயிர்.

This darkening eve, my darkling soul must perish utterly;
Remembering him who seeks for wealth, but seeks not me.

பொருட்பால்

இறைமாட்சி கல்வி கல்லாமை கேள்வி
அறிவுடைமை குற்றங்கடிதல் பெரியாரைத் துணைக்கோடல் சிற்றினஞ்சேராமை
தெரிந்துசெயல்வகை வலியறிதல் காலமறிதல் இடனறிதல்
தெரிந்துதெளிதல் தெரிந்துவினையாடல் சுற்றந்தழால் பொச்சாவாமை
செங்கோன்மை கொடுங்கோன்மை வெருவந்தசெய்யாமை கண்ணோட்டம்
ஒற்றாடல் ஊக்கமுடைமை மடியின்மை ஆள்வினையுடைமை
இடுக்கணழியாமை அமைச்சு சொல்வன்மை வினைத்தூய்மை
வினைத்திட்பம் வினைசெயல்வகை தூது மன்னரைச் சேர்ந்தொழுதல்
குறிப்பறிதல் அவையறிதல் அவையஞ்சாமை நாடு
அரண் பொருள்செயல்வகை படைமாட்சி படைச்செருக்கு
நட்பு நட்பாராய்தல் பழைமை தீ நட்பு
கூடாநட்பு பேதைமை புல்லறிவாண்மை இகல்
பகைமாட்சி பகைத்திறந்தெரிதல் உட்பகை பெரியாரைப் பிழையாமை
பெண்வழிச்சேறல் வரைவின்மகளிர் கள்ளுண்ணாமை சூது
மருந்து குடிமை மானம் பெருமை
சான்றாண்மை பண்புடைமை நன்றியில்செல்வம் நாணுடைமை
குடிசெயல்வகை உழவு நல்குரவு இரவு
இரவச்சம் கயமை