இகல்

திருக்குறள்:
 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 
தவலும் கெடலும் நணித்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மாறுபாடு கொண்டு எதிர்ப்பதால் வெற்றி பெறுவது எளிது என எண்ணிச் செயல்படுபவரின் வாழ்க்கை விரைவில் தடம்புரண்டு கெட்டொழியும்.

மு.வ உரை:
இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிபோதலும் அழிதலும் விரைவவில் உள்ளனவாம்.

சாலமன் பாப்பையா உரை:
பிறருடன் மனவேறுபாடு கொண்டு வளர்வது நல்லதே என்பவன்
வாழ்க்கை, அழியாமல் இருப்பதும் சிறிது காலமே; அழிந்து போவதும் சிறிது
காலத்திற்குள்ளேயாம்.

ADVERTISEMENTS
Translation:
The life of those who cherished enmity hold dear,
To grievous fault and utter death is near.

ADVERTISEMENTS
Explanation:
Failure and ruin are not far from him who says it is sweet to excel in hatred.