இகல்

திருக்குறள்:
 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி 
இன்னாசெய் யாமை தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வேற்றுமை
கருதி வெறுப்பான செயல்களில் ஒருவன் ஈ.டுபடுகிறான் என்றாலும் அவனோடு
கொண்டுள்ள மாறுபாடு காரணமாக அவனுக்குத் துன்பம் தரும் எதனையும்
செய்யாதிருப்பதே சிறந்த பண்பாகும்.

மு.வ உரை:
ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி
அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம்
செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா உரை:
நம்மோடு இணங்கிப் போக முடியாமல் ஒருவன் நமக்கு
வெறுப்புத் தருவனவற்றைச் செய்தாலும், அவனைப் பகையாக எண்ணித் தீமை
செய்யாதிருப்பது சிறந்த குணம்.

ADVERTISEMENTS
Translation:
Though men disunion plan, and do thee much despite
'Tis best no enmity to plan, nor evil deeds requite.

ADVERTISEMENTS
Explanation:
Though
disagreeable things may be done from (a feeling of) disunion, it is far
better that nothing painful be done from (that of) hatred.