இடுக்கணழியாமை

திருக்குறள்:
 மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற 
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
தடங்கல்
நிறைந்த கரடுமுரடான பாதையில் பெரும் பாரத்தை எருது இழுத்துக் கொண்டு போவது
போல, விடா முயற்சியுடன் செயல்பட்டால் துன்பங்களுக்கு முடிவு ஏற்பட்டு
வெற்றி கிட்டும்.

மு.வ உரை:
தடைபட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்றத் துன்பமே துன்பப்படுவதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
செல்லும் வழிகளில் எல்லாம் வண்டியை இழுத்துச் செல்லும் காளையைப் போன்று மனந்தளராமல் செல்ல வல்லவனுக்கு வந்த துன்பமே துன்பப்படும்.

ADVERTISEMENTS
Translation:
Like bullock struggle on through each obstructed way;
From such an one will troubles, troubled, roll away.

ADVERTISEMENTS
Explanation:
Troubles
will vanish (i.e., will be troubled) before the man who (struggles
against difficulties) as a buffalo (drawing a cart) through deep mire.