மடியின்மை

திருக்குறள்:
 இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து 
மாண்ட உஞற்றி லவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள்.

மு.வ உரை:
சோம்பலை
விரும்பி மேற்க் கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர் பிறர்
இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

சாலமன் பாப்பையா உரை:
சோம்பலில்
வீழ்வதால் சிறந்த முயற்சி செய்யாதவர், நண்பர்களால் முதலில் இடித்துச்
சொல்லப்பட்டு, பின்பு அவர் இழந்து பேசும் சொல்லையும் கேட்பர்.

ADVERTISEMENTS
Translation:
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.

ADVERTISEMENTS
Explanation:
Those
who through idleness, and do not engage themselves in dignified
exertion, will subject themselves to rebukes and reproaches.