வாழ்க்கைத் துணைநலம்

திருக்குறள்:
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.

மு.வ உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி
அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன? அமையாவிட்டால் அவனிடம்
இருப்பதுதான் என்ன?.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு இல்லாள்
நற்குண நற்செய்கையள் ஆயினக்கால் இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது
என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது? ('மாண்பு' எனக்குணத்தின் பெயர்
குணிமேல் நின்றது. இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு வேண்டுவது
இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
ஒருவனுக்கு மனையாள் மாட்சிமையுடையாளானால்
எல்லாமிலனேயாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால்
எல்லாமுடையானாயினும் உண்டானது யாது?.

Translation:
There is no lack within the house, where wife in worth
excels, There is no luck within the house, where wife dishonoured
dwells.

ADVERTISEMENTS
Explanation:
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?.