கள்ளாமை

திருக்குறள்:
அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் 
களவறிந்தார் நெஞ்சில் கரவு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

மு.வ உரை:
அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும் -
அவ்வளத்தலையே பயின்றவர் நெஞ்சத்து அறம் நிலை பெற்றாற்போல நிலைபெறும், களவு
அறிந்தார் நெஞ்சில் கரவு - களவையே பயின்றவர் நெஞ்சத்து வஞ்சனை. (உயிர்
முதலியவற்றை அளந்தறிந்தார்க்குத் துறவறம் சலியாது நிற்கும் என்பது
இவ்வுவமையால் பெற்றாம். களவோடு மாறின்றி நிற்பது இதனால் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
நேரறிந்தவர் நெஞ்சத்து அறம் நிற்குமாறுபோல நிற்கும்:
களவறிந்தவர் நெஞ்சில் வஞ்சகமும். இது களவு காண்பாரைப் பின்பு களவினின்று
தவிர்த்தல் முடியாதென்றது.

Translation:
As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.

ADVERTISEMENTS
Explanation:
Deceit dwells
in the mind of those who are conversant with fraud, even as virtue in
the minds of those who are conversant with rectitude.