தவம்

திருக்குறள்:
வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் 
ஈண்டு முயலப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உறுதிமிக்க நோன்பினால் விரும்பியதை விரும்பியவாறு அடைய முடியுமாதலால், அது விரைந்து முயன்று செய்யப்படுவதாகும்.

மு.வ உரை:
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால் செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்) முயன்று செய்யப்படும்.

சாலமன் பாப்பையா உரை:
விரும்பியவற்றை விரும்பியபடியே அடைய முடியுமாதலால் இப்பூமியில் தவம் முயன்று செய்யப்படும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால் மறுமைக்கண்
தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு
முயலப்படும் - செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும்.
('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள்
தவத்தானன்றி எய்தப்படா என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக்
கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
விரும்பின விரும்பினபடியே வருதலால், தவஞ்செய்தலை இவ்விடத்தே முயல வேண்டும். இது போக நுகர்ச்சியும் இதனானே வருமென்றது.

Translation:
That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.

ADVERTISEMENTS
Explanation:
Religious
dislipline is practised in this world, because it secures the attainment
of whatever one may wish to enjoy (in the world to come).