நெஞ்சொடுபுலத்தல்

திருக்குறள்:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் 
மாணா மடநெஞ்சிற் பட்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.

மு.வ உரை:
காதலனை மறக்க முடியாத என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சினோடு சேர்ந்து, மறக்கத் தகாததாகிய நாணத்தையும் மறந்து விடடேன்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்க முடியாத, என் நிலையில்லாத மடநெஞ்சோடு கூடி, நான் நாணத்தையும் மறந்துவிட்டேன்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) அவர் மறக்கல்லா என் மாணா மடநெஞ்சிற்பட்டு -
தன்னை மறந்த காதலரைத் தான் மறக்கமாட்டாத என் மாட்சிமையில்லாத மடநெஞ்சுடனே
கூடி; நாணும் மறந்தேன் - என் உயிரினும் சிறந்த நாண் தன்னையும்
மறந்துவிட்டேன். (மாணாமை - ஒரு நிலையில் நில்லாமை. மடமை - கண்டவழி நினைந்து
காணாதவழி மறக்குந் தவற்றைக் காணாவழி நினைந்து கண்டவழி மறத்தல். நாண் -
எஞ்ஞான்றும் கூடியொழுகினும் அஞ்ஞான்று கண்டார் போன்று ஒடுங்குதல், 'கண்ட
பொழுதே புணர்ச்சி விதும்பலின், அதனையும் மறந்தேன்', என்றாள்.) .

மணக்குடவர் உரை:
என்கண் நெறிவர நினையும் நாணத்தையும் கடைப்பிடித்திலேன்:
அவரை மறக்கமாட்டாத என் நன்மையில்லாத பேதை நெஞ்சோடு கூட்டுப்பட்டு. இது
தலைமகள் யான் நாணாது தூதுவிட்டது, பின்நெஞ்சு மறவாமையாலேயென்று அதனோடு
புலந்து கூறியது.

Translation:
Fall'n 'neath the sway of this ignoble foolish heart,
Which will not him forget, I have forgotten shame.

ADVERTISEMENTS
Explanation:
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him.