கூடாநட்பு

திருக்குறள்:
 இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர் 
மனம்போல வேறு படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உற்றாராக
இல்லாமல் உற்றார்போல நடிப்பவர்களின் நட்பு, மகளிருக்குரிய நற்பண்பு
இல்லாமல் அப்பண்பு உள்ளவர் போல நடிக்கும் விலை மகளிரின் மனம்போல
உள்ளொன்றும் புறமொன்றுமாக இருக்கும்.

மு.வ உரை:
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

சாலமன் பாப்பையா உரை:
வேண்டியவர் போலத் தோன்றி, மனத்தால் வேண்டாதவராக இருப்பவரோடு உண்டான நட்பு பாலியல் தொழிலாளர் மனம் போல வேறுபடும்.

ADVERTISEMENTS
Translation:
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.

ADVERTISEMENTS
Explanation:
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.