வினைசெயல்வகை

திருக்குறள்:
 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும் 
படுபயனும் பார்த்துச் செயல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஈடுபடக்கூடிய
ஒரு செயலால் எதிர்பார்க்கப்படும் பயன், அதற்கான முயற்சிக்கு இடையே வரும்
தடைகள், அச்செயலாற்றுதவற்கான முறை ஆகிய அனைத்தையும் முதலில் ஆராய்ந்து
அறிந்து கொள்ள வேண்டும்.

மு.வ உரை:
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
ஒரு செயலைச் செய்யும்போது அது முடிவதற்கான முயற்சி,
இடையில் வரும் தடை, முடியும்போது அடையும் பெரும்பயன் ஆகியவற்றை எண்ணிப்
பார்த்துச் செய்க.

ADVERTISEMENTS
Translation:
Accomplishment, the hindrances, large profits won
By effort: these compare,- then let the work be done.

ADVERTISEMENTS
Explanation:
An
act is to be performed after considering the exertion required, the
obstacles to be encountered, and the great profit to be gained (on its
completion).