தெரிந்துதெளிதல்

திருக்குறள்:
 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் 
திறந்தெரிந்து தேறப் படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அறவழியில்
உறுதியானவனாகவும், பொருள் வகையில் நாணயமானவனாகவும், இன்பம் தேடி
மயங்காதவனாகவும், தன்னுயிருக்கு அஞ்சாதவனாகவும் இருப்பவனையே ஆய்ந்தறிந்து
ஒரு பணிக்கு அமர்த்த வேண்டும்.

மு.வ உரை:
அறம்,
பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும்
ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.

சாலமன் பாப்பையா உரை:
அறத்தைக்
காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம்,
உனக்காகவே வாழும் பெண் இவள் என்பது போல் கூறி அறம், பணம், பெண் என்னும்
மூன்று பொய்க் காரணங்களால் சோதிப்பது, அவனது உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது
போல் நடிப்பது என இந்நான்கு சோதனைகளால் ஒருவனின் மன இயல்பை ஆராய்ந்து
அவனைப் பதவிக்குத் தேர்வு செய்ய வேண்டும்.

ADVERTISEMENTS
Translation:
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.

ADVERTISEMENTS
Explanation:
Let
(a minister) be chosen, after he has been tried by means of these four
things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and
tear of (losing) life.