இடனறிதல்

திருக்குறள்:
 சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர் 
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பாதுகாப்புக்கான
கோட்டையும், மற்றும் பல படைச் சிறப்புகளும் இல்லாதிருப்பினும், அப்பகைவர்
வாழும் நிலையான இடத்திற்குப் படையெடுத்துச் சென்று தாக்குவது எளிதான செயல்
அல்ல.

மு.வ உரை:
அரணாகிய நன்மையும் மற்றச் சிறப்பும் இல்லாதவராயினும் பகைவர் வாழ்கின்ற இடத்திற்குச் சென்று அவரைத் தாக்குதல் அரிது.

சாலமன் பாப்பையா உரை:
மனிதர்கள் வலிமையான கோட்டையும், மிகுந்த பலமும் இல்லாதவர்தாம் என்றாலும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தாக்குவது கடினம்.

ADVERTISEMENTS
Translation:
Though fort be none, and store of wealth they lack,
'Tis hard a people's homesteads to attack!.

ADVERTISEMENTS
Explanation:
It is a hazardous thing to attack men in their own country, although they may neither have power nor a good fortress.