குற்றங்கடிதல்

திருக்குறள்:
 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும் 
எண்ணப் படுவதொன் றன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எல்லாக்
குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள்
சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈ.யாமல் வாழ்வதுதான்.

மு.வ உரை:
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாலமன் பாப்பையா உரை:
செலவிட
வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப்
பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

ADVERTISEMENTS
Translation:
The greed of soul that avarice men call,
When faults are summed, is worst of all.

ADVERTISEMENTS
Explanation:
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone - greater than all).