கல்வி

திருக்குறள்:
 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன் 
சாந்துணையுங் கல்லாத வாறு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கற்றோர்க்கு எல்லா நாடுகளிலும் எல்லா ஊர்களிலும் சிறப்பு என்கிறபோது, ஒருவன் சாகும் வரையில் கற்காமல் காலம் கழிப்பது ஏனோ?.

மு.வ உரை:
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.

சாலமன் பாப்பையா உரை:
கற்றவனுக்கு
எல்லா நாடும் சொந்த நாடாம்; எல்லா ஊரும் சொந்த ஊராம். இதனைத் தெரிந்தும்
ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன்?.

ADVERTISEMENTS
Translation:
The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!.

ADVERTISEMENTS
Explanation:
How
is it that any one can remain without learning, even to his death, when
(to the learned man) every country is his own (country), and every town
his own (town) ?.