ஈகை

திருக்குறள்:
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம் 
ஈதல் இயையாக் கடை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
சாவு எனும் துன்பத்தைவிட வறியவர்க்கு எதுவும் வழங்க இயலாத மனத்துன்பம் பெரியது.

மு.வ உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல் போல இன்னாதது
ஒன்று இல்லை, அதூஉம் ஈதல் இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய சாதலும்,
வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை
நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று பாட்டானும் ஈயாமையின் குற்றம்
கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
சாதலின் மிக்க துன்பமில்லை. அதுவும் இனிதாம் இரந்து வந்தவர்க்குக் கொடுத்தல் முடியாவிடத்து. இஃது ஈயாது வாழ்தலில் சாதல் நன்றென்றது.

Translation:
'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!.

ADVERTISEMENTS
Explanation:
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.