ஈகை

திருக்குறள்:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை 
மாற்றுவார் ஆற்றலின் பின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பசியைப் பொறுத்துக் கொள்ளும் நோன்பைக் கடைப்பிடிப்பதைவிடப் பசித்திருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

மு.வ உரை:
தவ வலிமை உடையவரின் வலிமை பசியை பொறுத்துக் கொள்ளலாகும்,
அதுவும் அப் பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப்
பிற்பட்டதாகும்.

சாலமன் பாப்பையா உரை:
வல்லவர்க்கு மேலும் வலிமை, தமது பசியைப் பொறுத்துக்
கொள்வதே அந்த வலிமையும், பிறர் பசியைப் போக்குபவரின் வலிமைக்கு
அடுத்துத்தான் வலிமையாய் அமையும்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான் வலியார்க்கு
வலியாவது தம்மையுற்ற பசியைப் பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின்
- அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை ஈகையான் ஒழிப்பாரது
வலிக்குப்பின். (தாமும் பசித்துப் பிறரையும் அது தீர்க்க மாட்டாதார்
ஆற்றலின், தாமும் பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று
என்பதாம்.).

மணக்குடவர் உரை:
பெரியாரது பெருமையாவது பசியைப் பொறுத்தல்: அதுவும்
பெரிதாவது பிறர் பசியைத் தீர்ப்பாரது பெருமைக்குப் பின்பு. இது
தவம்பண்ணுவாரினும் தானம் பண்ணுவார் வலியுடைய ரென்றது.

Translation:
'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.

ADVERTISEMENTS
Explanation:
The power of
those who perform penance is the power of enduring hunger. It is
inferior to the power of those who remove the hunger (of others).