பயனில சொல்லாமை

திருக்குறள்:
சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க 
சொல்லிற் பயனிலாச் சொல்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பயனளிக்காத சொற்களை விடுத்து மனத்தில் பதிந்து பயனளிக்கக் கூடிய சொற்களையே கூற வேண்டும்.

மு.வ உரை:
சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்லவேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.

சாலமன் பாப்பையா உரை:
சொற்களில் அறம், பொருள், இன்பம் ஆகிய பயன்தரும் சொற்களையே சொல்லுக; பயனற்ற சொற்களைச் சொல்லவேண்டா.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
சொல்லில் பயன் உடைய சொல்லுக - சொற்களில் பயன் உடைய
சொற்களைச் சொல்லுக, சொல்லில் பயனில்லாச் சொல் சொல்லற்க - சொற்களில் பயன்
இல்லாத சொற்களைச் சொல்லாது ஒழிக. ('சொல்லில்' என்பது இருவழியும்
மிகையாயினும், சொற் பொருட் பின்வருநிலை என்னும் அணி நோக்கி வந்தது.
"வைகலும் வைகல் வரக்கண்டும்" (நாலடி 39) என்பது போல. இதனால்
சொல்லப்படுவனவும் படாதனவும் நியமிக்கப்பட்டன.).

மணக்குடவர் உரை:
சொல்லுவனாயின் பயனுடைய சொற்களைச் சொல்லுக: சொற்களிற் பயனில்லாத சொற்களைச் சொல்லா தொழிக. இது பயனில சொல்லாமை வேண்டுமென்றது.

Translation:
If speak you will, speak words that fruit afford,
If speak you will, speak never fruitless word.

ADVERTISEMENTS
Explanation:
Speak what is useful, and speak not useless words.