பொறையுடைமை

திருக்குறள்:
இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள் 
வன்மை மடவார்ப் பொறை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க
முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப்
பொறுத்துக் கொள்வது.

மு.வ உரை:
வறுமையுள் வறுமை, விருந்தினரைப் போற்றாமல் நீக்குதல்; வல்லமையுள் வல்லமை என்பது அறிவிலார் தீங்கு செய்தலைப் பொறுத்தலாகும்.

சாலமன் பாப்பையா உரை:
வறுமையுள் வறுமை, வந்த விருந்தினரை உபசரிக்காதது; வலிமையுள் வலிமை அற்றவரின் ஆத்திர மூட்டல்களைப் பொறுத்துக் கொள்வது.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
இன்மையுள் இன்மை விருந்து ஒரால்-ஒருவனுக்கு வறுமையுள்
வைத்து வறுமையாவது விருந்தினரை ஏற்றுக் கொள்ளாது நீக்குதல்; வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை-அதுபோல வன்மையுள் வைத்து வன்மையாவது அறிவின்மையான்
மிகை செய்தாரைப் பொறுத்தல். [இஃது எடுத்துக்காட்டு உவமை. அறன் அல்லாத
விருந்து ஒரால் பொருளுடைமை ஆகாதவாறுபோல, மடவார்ப் பொறையும் மென்மையாகாதே
வன்மையாம் என்பது கருத்து.].

மணக்குடவர் உரை:
வலிமையின்மையுள் வைத்து வலியின்மையாவது புதுமையை நீக்காமை:
வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல். புதுமை
யென்றது கேட்டறியாதது. நீக்காமை- பொறுமை.

Translation:
The sorest poverty is bidding guest unfed depart;
The mightiest might to bear with men of foolish heart.

ADVERTISEMENTS
Explanation:
To neglect hospitality is poverty of poverty. To bear with the ignorant is might of might.