பிறனில் விழையாமை

திருக்குறள்:
எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும் 
விளியாது நிற்கும் பழி.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எளிதாக அடையலாம் என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் முறைகேடாக நடப்பவன் என்றும் அழியாத பழிக்கு ஆளாவான்.

மு.வ உரை:
இச்செயல் எளியது என எண்ணிப் பிறனுடைய மனைவியிடம் நெறி தவறிச் செல்கின்றவன், ‌எப்போதும் அழியாமல் நிலைநிற்கும் பழியை அடைவான்.

சாலமன் பாப்பையா உரை:
அடைவது எளிது என எண்ணி அடுத்தவன் மனைவியுடன் தவறான தொடர்பு கொள்பவன், சாவாமல் எப்போதும் நிற்கும் பழியைப் பெறுவான்.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
எளிது என இல் இறப்பான் - 'எய்துதல் எளிது' என்று கருதிப்
பின்விளைவு கருதாது பிறன் இல்லின்கண் இறப்பான், விளியாது எஞ்ஞான்றும்
நிற்கும் பழி எய்தும் - மாய்தல் இன்றி எஞ்ஞான்றும் நிலைநிற்கும்
குடிப்பழியினை எய்தும். (இல்லின்கண் இறத்தல் - இல்லாள்கண் நெறிகடந்து
சேறல்.).

மணக்குடவர் உரை:
தனக்கு எளிதென்று நினைத்துப் பிறனுடைய இல்லின் கண்ணே
மிகுமவன் எல்லா நாளும் அழியாது நிற்கும் பழியைப் பெறுவான். இது பழியுண்டா
மென்றது.

Translation:
'Mere triflel' saying thus, invades the home, so he ensures.
A gain of guilt that deathless aye endures.

ADVERTISEMENTS
Explanation:
He who thinks lightly of going into the wife of another acquires guilt that will abide with him imperishably and for ever.