பசப்புறுபருவரல்

திருக்குறள்:
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் 
மேனிமேல் ஊரும் பசப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பிரிவு காரணமாகக் காதலர் உண்டாக்கினார் எனும் பெருமிதம் பொங்கிடப் பசலை நிறம் என் உடலில் ஏறி ஊர்ந்து பரவுகின்றது!.

மு.வ உரை:
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலை நிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகிறது.

சாலமன் பாப்பையா உரை:
இந்தப் பசலை அவர் எனக்குத் தந்தது என்னும் பெருமையினால் என் மேனி எங்கும் படருகின்றன.

ADVERTISEMENTS
பரிமேலழகர் உரை:
(ஆற்றாள்
எனக் கவன்ற தோழிக்கு ஆற்றுவல் என்பது படச் சொல்லியது.) (யான்
ஆற்றியுளேனாகவும்) பசப்பு - இப்பசப்புத்தான்; தந்தார் அவர் என்னும் தகையால்
- என்னையுண்டாக்கினார் அவர் என்னும் பெருமிதத்தான்; என் மேனிமேல்
இவர்தந்து ஊரும் - என் மேனியை மேற்கொண்டு செலுத்தா நின்றது. ('குருதி
கொப்புளிக்கும் வேலான் கூந்தன்மா இவர்ந்து செல்ல' (சீவக.விமலை.1)
என்புழியும் இவர்தல் இப்பொருட்டாதல்அறிக. 'அஃது உரிமைபற்றி ஊர்கின்றது.
இதற்கு நீ கவலல் வேண்டா' என்பதாம்.).

மணக்குடவர் உரை:
காதலர்
வரவிட்டாரென்னும் மிகுதியானே, பசப்பு என்னுடம்பின்மேலே பரந்து ஊரும். இஃது
இப்பசலையை நீக்கவேண்டுமென்ற தோழிக்கு இஃது என் குறிப்பினாலே வந்ததல்ல:
நீக்கவேண்டுவாயாயின் அவர்க்குச் சொல்லென்று கூறியது.

Translation:
'He gave': this sickly hue thus proudly speaks,
Then climbs, and all my frame its chariot makes.

ADVERTISEMENTS
Explanation:
Sallowness, as if proud of having been caused by him, would now ride on my person.