மானம்

திருக்குறள்:
 குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ 
குன்றி அனைய செயின்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
குன்றினைப்
போல் உயர்ந்து கம்பீரமாக நிற்பவர்களும் ஒரு குன்றிமணி அளவு இழிவான செயலில்
ஈ.டுபட்டால் தாழ்ந்து குன்றிப் போய் விடுவார்கள்.

மு.வ உரை:
மலை போல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்கு காரணமானச் செயல்களை ஒரு குன்றிமனி அளவு செய்தாலும் தாழ்ந்து போய் விடுவர்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல குடும்பத்தில் பிறந்து மலைபோல உயர்ந்தவரும்கூட தாழ்வானவற்றை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போவார்.

ADVERTISEMENTS
Translation:
If meanness, slight as 'abrus' grain, by men be wrought,
Though like a hill their high estate, they sink to nought.

ADVERTISEMENTS
Explanation:
Even those who are exalted like a hill will be thought low, if they commit deeds that are debasing.