மானம்

திருக்குறள்:
 தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் 
நிலையின் இழிந்தக் கடை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
மக்களின்
நெஞ்சத்தில் உயர்ந்த இடம் பெற்றிருந்த ஒருவர் மானமிழந்து
தாழ்ந்திடும்போது, தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமாகக்
கருதப்படுவார்.

மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலைமையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

சாலமன் பாப்பையா உரை:
நல்ல
குடும்பத்தில் பிறந்தவர் மானம் காக்காமல் தம் உயர்ந்த நிலையை
விட்டுவிட்டுத் தாழ்ந்தால், தலையை விட்டு விழுந்த மயிரைப் போன்றவர் ஆவார்.

ADVERTISEMENTS
Translation:
Like hairs from off the head that fall to earth,
When fall'n from high estate are men of noble birth.

ADVERTISEMENTS
Explanation:
They who have fallen from their (high) position are like the hair which has fallen from the head.