குடிமை

திருக்குறள்:
 வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி 
பண்பில் தலைப்பிரிதல் இன்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பழம் பெருமை வாய்ந்த குடியில் பிறந்தவர்கள் வறுமையால் தாக்குண்ட போதிலும், பிறருக்கு வழங்கும் பண்பை இழக்க மாட்டார்கள்.

மு.வ உரை:
தாம்
பிறர்க்குக் கொடுத்துதவும் வன்மை வறுமையால் சுருங்கிய போதிலும், பழம்
பெருமை உடைய குடியில் பிறந்தவர் தம் பண்பிலிருந்து நீங்குவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:
தொடர்ந்து வரும் நல்ல குடியில் பிறந்தவர் தம் பொருள் கொடுத்துக் குறைந்துவிட்டபோதும், கொடுக்கும் பண்பிலிருந்து விலகமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
Though stores for charity should fail within, the ancient race
Will never lose its old ancestral grace.

ADVERTISEMENTS
Explanation:
Though their means fall off, those born in ancient families, will not lose their character (for liberality).