சூது

திருக்குறள்:
 உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம் 
போஒய்ப் புறமே படும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பணயம்
வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன்
செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.

மு.வ உரை:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை
இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப்
பகைவரிடத்தில் சேரும்.

சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.

ADVERTISEMENTS
Translation:
If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.

ADVERTISEMENTS
Explanation:
If
the king is incessantly addicted to the rolling dice in the hope of
gain, his wealth and the resources thereof will take their departure and
fall into other's hands.