வரைவின்மகளிர்

திருக்குறள்:
 பழகிய பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் 
ஏத஧ல் பிணந்தழீஇ அற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
விலைமாதர்கள்
பணத்துக்காக மட்டுமே ஒருவரைத் தழுவிப் பொய்யன்பு காட்டி நடிப்பது,
இருட்டறையில் ஓர் அந்நியப் பிணத்தை அணைத்துக் கிடப்பது போன்றதாகும்.

மு.வ உரை:
பொருளையே விரும்பும் பொது மகளிரின் பொய்யானத் தழுவல், இருட்டறையில் தொடர்பில்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
பொருளையே விரும்பும் பாலியல் தொழிலாளரின் போலித் தழுவல், இருட்டு அறையில் முன்பு அழியாத பிணத்தைத் தழுவுவது போலாம்.

ADVERTISEMENTS
Translation:
As one in darkened room, some stranger corpse inarms,
Is he who seeks delight in mercenary women's charms!.

ADVERTISEMENTS
Explanation:
The false embraces of wealth-loving women are like (hired men) embracing a strange corpse in a dark room.