உட்பகை

திருக்குறள்:
 உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் 
பாம்போடு உடனுறைந் தற்று.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
உள்ளத்தால்
ஒன்றுபடாதவர்கள் கூடிவாழ்வது என்பது ஒரு சிறிய குடிலுக்குள் பாம்புடன்
இருப்பது போன்று ஒவ்வொரு நொடியும் அச்சம் தருவதாகும்.

மு.வ உரை:
அகத்தில் உடண்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

சாலமன் பாப்பையா உரை:
மனப்பொருத்தம் இல்லா‌தவரோடு சேர்ந்து வாழும் வாழ்க்கை, ஒரு குடிசைக்குள்ளே பாம்புடன் சேர்ந்து வாழ்வது போலாகும்.

ADVERTISEMENTS
Translation:
Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.

ADVERTISEMENTS
Explanation:
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.