பழைமை

திருக்குறள்:
 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் 
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
பழைமை பாராட்டுவது என்னவென்றால், பழகிய நண்பர்கள், தங்களின் உறவை அழியாமல் பாதுகாப்பதுதான்.

மு.வ உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினாவினால் அது பழகியவர் உரிமைப் பற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல் ஏற்கும் நட்பாகும்.

சாலமன் பாப்பையா உரை:
பழைமை என்று சொல்லப்படுவதன் பொருள் என்ன என்றால்,
நெடுங்கால நண்பர் நம்மீது உரிமை எடுத்துக் கொண்டு பிழைபட நடந்தாலும் அதைப்
பொருட்படுத்தாத நட்பு எனலாம்.

ADVERTISEMENTS
Translation:
Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act.

ADVERTISEMENTS
Explanation:
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).