படைச்செருக்கு

திருக்குறள்:
 கைவேல் களிற்றொடு போக்கி வருபவன் 
மெய்வேல் பறியா நகும்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
கையிலிருந்த
வேலினை யானையின் மீது வீசி விட்டதால் களத்தில் போரினைத் தொடர வேறு வேல்
தேடுகிற வீரன், தன் மார்பின்மீதே ஒரு வேல் பாய்ந்திருப்பது கண்டு மகிழ்ந்து
அதனைப் பறித்துப் பகையை எதிர்த்திடுகின்றான்.

மு.வ உரை:
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின் மேல் எறிந்து
துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக்
கண்டு பறித்து மகிழ்கின்றான்.

சாலமன் பாப்பையா உரை:
தன்னை எதிர்த்து வந்த யானையின் மீது தன் கையிலிருந்த
வேலை எறிந்து விட்டவன், அடுத்து வருகி்ன்ற யானை மீது எறிவதற்காகத் தன்
மார்பில் பதிந்து நின்ற வேலைப் பறித்துக் கொண்டே மகிழ்வான்.

ADVERTISEMENTS
Translation:
At elephant he hurls the dart in hand; for weapon pressed,
He laughs and plucks the javelin from his wounded breast.

ADVERTISEMENTS
Explanation:
The
hero who after casting the lance in his hand on an elephant, comes (in
search of another) will pluck the one (that sticks) in his body and
laugh (exultingly).