அரண்

திருக்குறள்:
 எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும் 
நல்லாள் உடையது அரண்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
போருக்குத் தேவையான எல்லாப் பொருள்களும் கொண்டதாகவும், களத்தில் குதிக்கும் வலிமை மிக்க வீரர்களை உடையதாகவும் இருப்பதே அரண் ஆகும்.

மு.வ உரை:
தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளிருப்போர்க்குத் தேவையான பொருள் எல்லாம்
இருப்பதாய், வெளியே இருந்து அழிக்க முயலும் பகைவரை வெல்ல உதவும் வீரரைப்
பெற்றதாய் இருப்பதே அரண்.

ADVERTISEMENTS
Translation:
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.

ADVERTISEMENTS
Explanation:
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).