நாடு

திருக்குறள்:
 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் 
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆறு,
கடல் எனும் இருபுனலும், வளர்ந்தோங்கி நீண்டமைந்த மலைத் தொடரும்,
வருபுனலாம் மழையும், வலிமைமிகு அரணும், ஒரு நாட்டின் சிறந்த
உறுப்புகளாகும்.

மு.வ உரை:
ஊற்றும் மழையும் மாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு
அமைந்த மலையும் அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும் வலிய அரணும்
நாட்டிற்கு உறுப்புகளாகும்.

சாலமன் பாப்பையா உரை:
ஆற்றுநீரும், ஊற்றுநீரும் உயரமும் அகலமும் உடைய
வாய்ப்பான மலையும், மழை நீரும், அழிக்க முடியாத கோட்டையும் நாட்டிற்குத்
தேவையான உறுப்புகளாம்.

ADVERTISEMENTS
Translation:
Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.

ADVERTISEMENTS
Explanation:
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.