நாடு

திருக்குறள்:
 கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா 
நாடென்ப நாட்டின் தலை.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
எந்த
வகையிலும் கெடுதலை அறியாமல், ஒருவேளை கெடுதல் ஏற்படினும் அதனைச் சீர்
செய்யுமளவுக்கு வளங்குன்றா நிலையில் உள்ள நாடுதான், நாடுகளிலேயே
தலைசிறந்ததாகும்.

மு.வ உரை:
பகைவரால் கெடுக்கப் படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய் உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலைமையானது என்று கூறுவர்.

சாலமன் பாப்பையா உரை:
பகைவரால் கெடுதலை அறியாததாய், அறிந்தாலும் வளம் தருவதில் குறையாததாய் இருப்பதையே நாடுகளில் சிறந்தது என்று அறிந்தோர் கூறுவர்.

ADVERTISEMENTS
Translation:
Chief of all lands is that, where nought disturbs its peace;
Or, if invaders come, still yields its rich increase.

ADVERTISEMENTS
Explanation:
The
learned say that the best kingdom is that which knows no evil (from its
foes), and, if injured (at all), suffers no diminution in its
fruitfulness.