நாடு

திருக்குறள்:
 பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறையொருங்கு நேர்வது நாடு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
புதிய
சுமைகள் ஒன்றுணிரண்டு வரும் போதும் அவற்றைத் தாங்கிக் கொண்டு, அரசுக்குரிய
வரி வகைகளைச் செலுத்துமளவுக்கு வளம் படைத்ததே சிறந்த நாடாகும்.

மு.வ உரை:
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன் மேல் வரும் போது தாங்கி, அரசனுக்கு இறைபொருள் முழுதும் தர வல்லது நாடாகும்.

சாலமன் பாப்பையா உரை:
போர், இயற்கை அழிவு ஆகியவற்றால் மக்கள் பிற நாடுகளில்
இருந்து வந்தால் அந்த பாரத்தையும் தாங்கும்; தன் அரசிற்குத் தான் தரவேண்டிய
வரியையும் மகிழ்வோடு தரும்; இதுவே நாடு.

ADVERTISEMENTS
Translation:
When burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land' .

ADVERTISEMENTS
Explanation:
A
kingdom is that which can bear any burden that may be pressed on it
(from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its
sovereign.