அவையஞ்சாமை

திருக்குறள்:
 ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா 
மாற்றங் கொடுத்தற் பொருட்டு.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அவையில்
பேசும்போழுது குறுக்கீடுகளுக்கு அஞ்சாமல் மறுமொழி சொல்வதற்கு ஏற்ற வகையில்
இலக்கணமும், தருக்கமெனப்படும் அளவைத் திறமும் கற்றிருக்க வேண்டும்.

மு.வ உரை:
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடைகூறும் பொருட்டாக நூல்களைக் கற்க்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை:
பெரியோர் அவையில் பயப்படாமல் பதில் சொல்வதற்கு,
சொல்இலக்கண வழியில் பலவகைப் பிரமாணங்களைச் சொல்லும் தர்க்க சாஸ்திரத்தை
விரும்பிக் கற்றுக் கொள்க.

ADVERTISEMENTS
Translation:
By rule, to dialectic art your mind apply,
That in the council fearless you may make an apt reply.

ADVERTISEMENTS
Explanation:
In order to reply fearlessly before a foreign court, (ministers) should learn logic according to the rules (of grammar).