அவையஞ்சாமை

திருக்குறள்:
 பகையகத்துச் சாவார் எளியர் அரியர் 
அவையகத்து அஞ்சா தவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
அமர்க்களத்தில்
சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர்
நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

மு.வ உரை:
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை:
பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.

ADVERTISEMENTS
Translation:
Many encountering death in face of foe will hold their ground;
Who speak undaunted in the council hall are rarely found.

ADVERTISEMENTS
Explanation:
Many
indeed may (fearlessly) die in the presence of (their) foes; (but) few
are those who are fearless in the assembly (of the learned).