மன்னரைச் சேர்ந்தொழுதல்

திருக்குறள்:
 கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார் 
துளக்கற்ற காட்சி யவர்.

ADVERTISEMENTS
கலைஞர் உரை:
ஆட்சியால்
நாம் ஏற்றுக் கொள்ளப்பட்டவராயிற்றே என்ற துணிவில், ஏற்றுகொள்ள முடியாத
காரியங்களைத் தெளிந்த அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர் யாம் அரசரால் விரும்பப்பட்டோம் என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

சாலமன் பாப்பையா உரை:
சலனம் அற்ற அறிவை உடையவர்கள், தாம் ஆட்சியாளரால்
மிகவும் மரியாதைக்கு உரியவர்கள் என்று எண்ணி, ஆட்சியாளர் விரும்பாதவற்றைச்
செய்யமாட்டார்.

ADVERTISEMENTS
Translation:
'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.

ADVERTISEMENTS
Explanation:
Those
whose judgement is firm will not do what is disagreeable (to the
sovereign) saying (within themselves) "We are esteemed by the king".